தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா; 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 17 May 2022 8:34 PM IST (Updated: 17 May 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,  

தமிழகத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 

தமிழகத்தில் இன்று  12 ஆயிரத்து 573 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 14 பேரும், பெண்கள் 20 பேரும் உள்பட 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. 

இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று 42 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story