ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு


ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 18 May 2022 4:55 AM IST (Updated: 18 May 2022 4:55 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 15.08 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு முந்தைய மாதமான மார்ச்சில் மொத்தவிலை பணவீக்க விகிதம் 14.55 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் 10.74 சதவீதமாகவும் இருந்தது.

கனிம எண்ணெ ய்கள், உலோகங்கள், கச்சா பெ ட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவு பொருட்கள், ரசாயன தயாரிப்புகள் ஆகியவற்றின் விலை உயர்ந்ததுதான் பணவீக்க உயர்வுக்கு காரணம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமை ச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து 13-வது மாதமாக மொத்தவிலை பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது.

Next Story