இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 May 2022 9:06 AM IST (Updated: 18 May 2022 9:06 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,829 ஆக உயர்ந்து. 33 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.  இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  ஒரே நாளில் 1,829 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.  நேற்று முன் தினம் 2,202 நேற்று 1,569 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 1,829 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,25,370 -ல் இருந்து  4,31,27,199 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,549 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,84,710 லிருந்து 4,25,87,259 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,400 லிருந்து 15,647 ஆனது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 33 பேர் பலியாகினர். இதுவரை 5,24,293 பேர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் ஒரே நாளில் 14,97,695 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 191.65 கோடி பேருக்கு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story