2024 நாடாளுமன்ற தேர்தல்; வடமண்டல பா.ஜ.க. பொது செயலாளர்களுடன் ஜே.பி. நட்டா நாளை ஆலோசனை
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வடமண்டல பா.ஜ.க. பொது செயலாளர்களுடன் ஜே.பி. நட்டா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை அடுத்து, கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைவர்கள், தேர்தலுக்கான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அனைத்து வடமண்டல பா.ஜ.க. பொது செயலாளர்கள் மற்றும் தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனை தொடர்ந்து, நாளை மறுநாள் தென்மண்டல பா.ஜ.க. பொது செயலாளர்கள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
டெல்லியில் நாளை காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டம் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
இமாசல பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், குஜராத், டாமன் டையூ-தாதர் நகர் ஹாவேலி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை வடமண்டல பகுதிக்கு உட்பட்டவை ஆகும்.