இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,742 லிருந்து 21,406 ஆக குறைந்தது.
சென்னை,
இந்தியாவில் நேற்று 1,331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 2,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,72,800 லிருந்து 4,49,74,909 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 5,31,707 லிருந்து 5,31,722 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3,430 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,21,781 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,742 லிருந்து 21,406 ஆக குறைந்தது.
Related Tags :
Next Story