மடாதிபதி தற்கொலை வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


மடாதிபதி தற்கொலை வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 17 Dec 2022 2:55 AM IST (Updated: 17 Dec 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

ராம்நகரில் மடாதிபதி தற்கொலை வழக்கில் 2016 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு:-

ராமநகர் மாவட்டத்தில் உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவர், தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு மடத்தில் தற்கொலை செய்திருந்தார். இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நீலாம்பிகை, கண்ணூரு மடத்தின் மடாதிபதியான மிருதன்ஜெயா, பசவராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்திருந்தார்கள். மடாதிபதியை ஹனிடிராப் மூலம் சிக்க வைத்ததுடன், ஆபாச புகைப்படம், வீடியோவை சித்தரித்து வெளியிட்டு இருந்ததால், அவர் தற்கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் சுரேஷ் என்பவர் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை வழக்கு தொடர்பாக ராமநகர் கோர்ட்டில் மாகடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகை 216 பக்கங்களை கொண்டதாகும். இதற்காக 72 சாட்சிகளிடம் நடத்திய விசாரணை தகவல்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. நீலாம்பிகையை மடாதிபதி அவமானப்படுத்தி இருந்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக மிருதன்ஜெயயாவுடன் சேர்ந்து ஹனிடிராப் முறையில் பசவலிங்க சுவாமியை சிக்க வைத்து, மிரட்டியதாகவும், இதற்கு தேவையான பண உதவியை மிருதன்ஜெயா செய்து கொடுத்ததாகவும் குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story