விஷ செடிகளை தின்று 22 ஆடுகள் செத்தன


விஷ செடிகளை தின்று 22 ஆடுகள் செத்தன
x

எச்.டி.கோட்டையில் விஷ செடிகளை தின்று 22 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

மைசூரு:-

பட்டி அமைத்து...

துமகூரு மாவட்டம் சிரா தாலுகா குண்டே கிராமத்தை சேர்ந்தவர் கீதம்மா. இவர் தனக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகிறார். இ்ந்த நிலையில், அவர் ஒவ்வொரு ஊராக சென்று பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஆடுகளுடன் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டைக்கு வந்தார்.

எச்.டி.கோட்டையில் ஒம்மரஹள்ளி கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் அவர் பட்டி அமைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் தனது ஆடுகளை அவர் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

22 ஆடுகள் செத்தன

அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகள் திடீரென்று அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி கீதம்மா, இதுபற்றி உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு

செய்தார். பின்னர் அவர் மயங்கி கிடந்த ஆடுகளுக்கு பரிசோதனை ெசய்தார். அப்போது 22 ஆடுகள் ெசத்தது விட்டதாக தெரிவித்தார்.

மேலும் சில ஆடுகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார். மேலும் அந்த ஆடுகள் விஷ செடிகளை தின்றதால் செத்ததாகவும் கால்நடை டாக்டர் தெரிவித்தார். 22 ஆடுகள் செத்ததால் கீதம்மாவுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தனக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story