வேலை கிடைக்காததால் விரக்தி: சான்றிதழ்களை தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் கன்னூஜ் பகுதியை சேர்ந்தவர் பிரஜிஸ்பால் (24). கல்லூரி படிப்படை முடித்த பிரஜிஸ்பாலுக்கு வேலை கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த போலீஸ் தேர்விலும் பிரஜிஸ்பால் பங்கேற்றுள்ளார். ஆனால், அதிலும் அவர் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த பிரஜிஸ்பால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்குமுன் பிரஜிஸ்பால் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் வேலை கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து குறிப்பிட்டுள்ளார். பிரஜிஸ்பால் எழுதிய கடிதத்தில், வேலை கிடைக்கவில்லையென்றால் ஒருவர் டிகிரி வாங்கி என்ன நன்மை. என் வாழ்நாளில் பாதியை நான் படிப்பில் செலவழித்துவிட்டேன். வேலை கிடைக்காததால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை' என தெரிவித்துள்ளார்.
இந்த சமப்வம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரஜிஸ்பால் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.