அசாம் எல்லையில் டிரக்கில் கடத்தப்பட்ட 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது


அசாம் எல்லையில் டிரக்கில் கடத்தப்பட்ட 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
x

அசாம்-திரிபுரா எல்லையில் டிரக்கில் கடத்தி வரப்பட்ட 2,400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திஸ்பூர்,

வட மாநிலங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விநியோகத்தை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அசாம்-திரிபுரா மாநில எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் சோதனை நடத்தி வந்த போலீசார், அந்த வழியாக வந்த ஒரு டிரக்கை சோதனை செய்தனர். அப்போது அந்த டிரக்கில் அதிக அளவில் கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த டிரக்கில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதில் மொத்தம் 2,400 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story