நாட்டில் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 25% உயர்வு: மத்திய மந்திரி தகவல்


நாட்டில் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி 25% உயர்வு:  மத்திய மந்திரி தகவல்
x

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது.



புதுடெல்லி,


இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நிறுவனங்கள் முடங்கி, பொருளாதார தேக்கநிலையை நாடு சந்தித்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார முன்னேற்ற நிலை காணப்படுகிறது.

நாட்டில், உற்பத்தி துறையின் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஆரோக்கியமுடன் காணப்பட்டது என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று கூறும்போது, இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியானது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் (2022-23) 2-ம் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதன்படி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கால்நடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியானது, இந்த நிதியாண்டில் பெருமளவில் அதிகரித்து உள்ளது.

நடப்பு நிதியாண்டின் 6 மாதங்களில், இதற்கு முந்தின ஆண்டில், இதே மாதங்களில் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதி 42% அதிகரித்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story