கர்நாடகத்தில் புதிதாக 275 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 275 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 21 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக பெங்களூரு நகரில் 132 பேர், குடகில் 36 பேர், மைசூரு, ராமநகரில் தலா 17 பேர் உள்பட 275 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 40 லட்சத்து 63 ஆயிரத்து 427 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 238 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்து 95 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 241 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். 40 லட்சத்து 20 ஆயிரத்து 52 பேர் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பினர்.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story