தொழில்நுட்ப குளறுபடிகளால் 'க்யூட்' நுழைவு தேர்வு 2-வது நாளாக பாதிப்பு
தொழில்நுட்ப குளறுபடிகளால் ‘க்யூட்’ நுழைவு தேர்வு 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க 'க்யூட்' என்ற பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான 'க்யூட்' தேர்வு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலையிலும், மாலையிலும் 2 ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகளால் 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வு 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாலையில் நடக்க இருந்த தேர்வு, மொத்தம் உள்ள 489 மையங்களிலும் ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று 2-வது நாளாக தொழில்நுட்ப குளறுபடியால் தேர்வு பாதிக்கப்பட்டது. ஆனால், காலையில் 95 சதவீத மையங்களில் தேர்வு சுமுகமாக நடந்ததாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
Related Tags :
Next Story