ரூ.12½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது
பெங்களூருவில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
பெங்களூரு:
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், கேரள மாநிலத்தை சேர்ந்த சிகாஜ் முகமது, ஷாகீத், ஜதீன் என்று தெரிந்தது. இவர்களில் சிகாஜ் முகமது துணி வியாபாரமும், ஷாகீத், ஜதீன் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்தனர்.
எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கல்லூரி மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கும் அவர்கள் போதைப்பொருட்களை விற்று வந்தது தெரிந்தது. கைதான 3 பேரிடம் இருந்து 101 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 90 கிராம் போதை பவுடர், 4½ கிலோ கஞ்சா, பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.12½ லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story