பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவ-மாணவிகள் குட்டையில் பிணமாக மீட்பு


பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவ-மாணவிகள் குட்டையில் பிணமாக மீட்பு
x

பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவ-மாணவிகள் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டம் சீதாபூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர்.

அப்போது, அந்த பள்ளியில் படித்த மாணவன், 2 மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அக்கம்பக்கத்திலும் திவிரமாக தேடினர்.

அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story