ரூ.3½ கோடி தங்க நகைகள் பறிமுதல்


ரூ.3½ கோடி தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3½ கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எஸ்.ஜே.பார்க்:-

6½ கிலோ தங்க நகைககள்

பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், ஸ்கூட்டரை வழிமறித்தார்கள். அவர்களிடம் ஒரு பை இருந்தது. அந்த பையை வாங்கி போலீசார் சோதனை நடத்திய போது, ஏராளமான தங்க நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஒட்டு மொத்தமாக 6½ கிலோ தங்க நகைகள் அந்த பையில் இருந்தது. இதுபற்றி போலீசார் கேட்ட போது, 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். அத்துடன் தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் 3 பேரிடமும் இல்லை என்பதையும் போலீசார் உறுதி செய்தார்கள்.

உரிய ஆவணங்கள் இல்லை

அதே நேரத்தில் தங்க நகைகளை வியாபாரத்திற்காக எடுத்து செல்வதாக 3 பேரும் தெரிவித்தனர். என்றாலும், தங்க நகைகளை எடுத்து சென்ற போது 3 பேரிடமும் உரிய ஆவணங்கள் இல்லாததால் 6½ கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3½ கோடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீதும் எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.3½ கோடி மதிப்பிலான நகைகளுக்கும் உரிய ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்து விட்டு நகைகளை மீட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story