அதிகாலையில் டீக்கடைக்குள் புகுந்த லாரி - 3 பேர் பலி


அதிகாலையில் டீக்கடைக்குள் புகுந்த லாரி - 3 பேர் பலி
x

அதிகாலையில் டீக்கடைக்குள் புகுந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் கிரிப்ஹர் பகுதியில் டீக்கடை உள்ளது. அயோத்தியா - பிரயாக்ராஜ் இடையேயான நெடுஞ்சாலை அருகே இந்த டீக்கடை அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த டீக்கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் வாடிக்கையாளர்கள் சிலர் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் டீக்கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story