ஜார்கண்ட்: ஆட்டோ மீது பைக் மோதி பயங்கர விபத்து - 3 பேர் பலி
ஜார்கண்டில் ஆட்டோ மீது பைக் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குந்தி,
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் ஆட்டோ மீது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குந்தி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள அனேகடா இந்தியன் ஆயில் டிப்போ அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
7-8 பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ மீது வேகமாக வந்த பைக் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குந்தி காவல் நிலைய அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story