பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 30 நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் - அதிர்ச்சி சம்பவம்


பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 30 நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் - அதிர்ச்சி சம்பவம்
x

பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக்கழத்தின் மாணவர் விடுதியில் ஒரு மாணவனை சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் விடுதியில் போலீசார் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது மாணவர் விடுதியில் 30 நாட்டு வெடிகுண்டுகள், 2 துப்பாக்கிகள், துப்பாக்கிகுண்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசார் இதை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story