திருப்பதி அருகே ரூ.30 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
பாலப்பள்ளி மலைத்தொடரில் மொகிலிபண்டாவில் 20 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி மாவட்டம் அன்னதம்முலாபண்டா அருகில் உள்ள மொகிலிபண்டா வனப்பகுதியில் நேற்று அதிகாலை செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மேதாசுந்தரராவ் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்ரெட்டி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலப்பள்ளி மலைத்தொடரில் மொகிலிபண்டாவில் செம்மரக்கடத்தல் கும்பல் சிலர் நடந்து சென்றதைப் போலீசாா் பார்த்தனர். உடனே அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
அந்தக் கும்பல் விட்டுச்சென்ற 20 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 415 கிலோ எடையிலான செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும் எனப் போலீசார் தெரிவித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story