இந்தியாவில் மேலும் 310 பேருக்கு தொற்று: 3 பேர் பலி
இந்தியாவில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று 224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,90,278 லிருந்து 4,49,90,588 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,867 லிருந்து 5,31,870 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 588 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,54,496 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,503 லிருந்து 4,222 ஆக குறைந்தது.
Related Tags :
Next Story