ஞாயிறுக்கு பதில் வெள்ளி விடுமுறை; உருது பள்ளி என பெயர் மாற்றம்; ஒன்று, இரண்டல்ல 500 பள்ளிகள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்


ஞாயிறுக்கு பதில் வெள்ளி விடுமுறை; உருது பள்ளி என பெயர் மாற்றம்; ஒன்று, இரண்டல்ல 500 பள்ளிகள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
x

அரசுப்பள்ளிகளில் காலை நடைபெறும் இறைவழிபாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது.

ராஞ்சி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜமத்ரா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிறுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவது கடந்த மாதம் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையில் வசித்து வரும் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் காலை செய்யும் இறைவழிபாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக கைகளை கூப்பி வணங்கி இறைவழிபாடு செய்யும் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த முறையில் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாணவ-மாணவிகள் இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டு முறையான கைகளை மடக்கி தலையை குணிந்து காலை இறைவழிபாடு செய்யும் முறையை பின்பற்றி வந்துள்ளனர். இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்த மாற்றங்கள் மாநில அரசின் கவனத்திற்கு செல்லமாலேயே அரங்கேறியுள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகள், இஸ்லாமிய மத போதகர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோரின் அழுத்தத்தால் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்த மாற்றம் ஜமத்ரா மாவட்டத்தை போன்றே அம்மாநிலத்தின் ராம்ஹரா, ஹர்வா, டும்கா, டியொஹர், கட்டா, கிரிடிஹா, பலமும்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் உருது சேர்க்கப்பட்டுள்ளது. வார விடுமுறை ஞாயிறுக்கு பதில் இஸ்லாமிய மத மாணவ-மாணைவிகள் இறைவழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது மாநில அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு மாநில கல்வித்துறை கடந்த 2-ம் தேதி எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.

அதில், உரிய அனுமதியின்றி 407 பள்ளிகளில் அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 509 பள்ளிகளில் விடுமுறை நாள் ஞாயிறுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாநில கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

இந்த ஆய்வை தொடர்ந்து அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்ட 407 பள்ளிகளில் 307 பள்ளிகளில் உருது மொழி நீக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து வந்த 509 பள்ளிகளில் 459 பள்ளிகளில் மீண்டும் விடுமுறை தினம் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. எஞ்சிய பள்ளிகளிலும் பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் உரிய அனுமதியின்றி விடுமுறை நாள் மாற்றம், காலை இறைவழிபாடு முறை மாற்றம், உருது மொழி சேர்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட இந்த செயலில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனாதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக ஹெமந்த் சோரன் முதல்-மந்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story