ரூ.300 பணத்துக்காக இளைஞரை கத்தியால் குத்திக்கொன்ற 4 பேர் கைது
குற்றவாளிகளான 4 பேரையும் கைதுசெய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லியில் 300 ரூபாய் பணத்துக்காக இளைஞர் ஒருவல் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் சங்கம் காலனியில் உள்ள ரயில்வே லைன் அருகே உள்ள பூங்காவில் நண்பர்களான பிரமோத் மற்றும் அபிஷேக் இருவரும் சீட்டு விளையாடினர்.
அப்போது சீட்டாட்டத்தில் அபிஷேக் 300 ரூபாய் இழந்தார். இதனை தொடர்ந்து அபிஷேக்கிடம் பிரமோத் 300 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது.
சண்டை எல்லைமீறியதால், பிரமோத்துடன் மேலும் சில இளைஞர்கர் அபிஷேக்கை தாக்கினர். அப்போது பிரமோத், கத்தி ஒன்றை எடுத்து அபிஷேக்கை குத்திக்கொன்றார். பின்னர் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18-19 வயதுக்குட்பட்ட பிரமோத், ரஜ்னிஷ், அமித் குமார் மற்றும் ரோஷன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளான 4 பேரையும் கைதுசெய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.