பீகாரில் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று


பீகாரில் 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 Dec 2022 2:21 PM IST (Updated: 26 Dec 2022 2:30 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் புத்த கயாவில் 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கயா,

சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

தொற்று பரவல் அதிகம் இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களிலும் நேற்று முன்தினத்தில் இருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், பீகாரில் புத்த கயாவில் 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகாரின் புத்த கயாவில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 4 பேரில் இருவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். மியான்மாரைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலச் சக்கர பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டவர்களுக்கு இருமல் மற்றும் சளி இருப்பது தெரியவந்ததையடுத்து, மாவட்ட நீதிபதி தியாகராஜன் எஸ்.எம். தலைமையில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது என்று கயா சிவில் சர்ஜன் கமல் கிஷோர் ராய் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் புத்தகயாவில் உள்ள உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கயா மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ரஞ்சன் சிங் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா தீவிரமானவை அல்ல என்றே கூறப்படுகிறது. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் புத்த கயாவில் காலச் சக்ர பூஜை நடத்தப்படுகிறது இதில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் பங்கேற்பார்கள்.

இந்தாண்டுக்கான காலச் சக்ர பூஜை டிசம்பர் 29-ம் தேதி முதல் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்புப் பூஜையில் பங்கேற்க திபெத்திய புத்த மதகுரு தலாய்லாமா புத்தகயா நகருக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story