மிசோரமில் பெட்ரோல் லாரி தீப்பிடித்ததில் 4 பேர் பலி; 10 பேர் காயம்
மிசோரமில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
அய்சாவல்,
மிசோரமின் அய்சாவல் மாவட்டத்தில் துய்ரியால் நகரில் பெட்ரோல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சாலையில் சென்றுள்ளது. இந்நிலையில், அந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது.
இந்த சம்பவத்தில் டாக்சி ஒன்றும் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரண்டும் சிக்கி சேதமடைந்து உள்ளன. தீ விபத்தில் வாகனங்கள் சிக்கியதில் 4 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர் என அய்சாவல் எஸ்.பி. லால்ருவாயியா கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் பணி நடந்து வருகிறது. போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story