காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் மீட்பு


காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் மீட்பு
x

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்களது சக மாணவர்களுடன் கோவா செல்ல திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது.

உப்பள்ளி;

கல்லூாி செல்வதாக.....


கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் ஸ்டேசன் ரோட்டில் அரசு பி.யூ. கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் டவுன் பகுதியை சேர்ந்த 2 மாணவிகளும், சக்தி நகரை சேர்ந்த 2 மாணவிகளும் படித்து வந்தனர். தோழிகளான இவர்கள் 4 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவா்கள் கல்லூரிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த மாணவிகளின் பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர்.

மேலும் இதுகுறித்து ராய்ச்சூர் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடிவந்தனர். அவா்கள் 4 பேரும் மைனர் பெண் ஆவார்கள்.

கோவா செல்வதற்காக...

இந்தநிலையில் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக கும்பலாக சுற்றித்திரிந்த 4 மைனர்பெண்கள் மற்றும் 2 வாலிபா்களை ரெயில்வே போலீசார் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராய்ச்சூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் என்பதும், அவர்களுடன் இருந்தது அதே கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை உப்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவா்கள் 6 பேரும் சேர்ந்து பெற்றோர் மற்றும் கல்லூரி பேராசிரியர் என யாரிடமும் செல்லாமல் கோவாவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து உப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்ததும், கோவாவுக்கு செல்லும் ரெயில் காலையில் தான் வரும் என்பதால் போலீசிற்கு பயந்து அங்கேயே தங்க முடிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் ராய்ச்சூர் போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் உடன் இருந்த 2 மாணவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story