காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது


காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவை சேர்ந்தவர் வருண். காங்கிரஸ் பிரமுகர். கடந்த வாரம் தரிகெரேவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழாவில் வருண் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆடல், பாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த வருண், தனக்கு பிடித்த பாடலை போடும்படி கூறினார். அப்போது சிலர் வருணுக்கு எதிராக செயல்பட்டனர். இதை பார்த்த வருண் அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது எதிர் தரப்பை சேர்ந்தவர்கள், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வருணை சரமாரியாக குத்தினர். இந்த கத்தி குத்தில் பலத்த காயமடைந்த வருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை குறித்து தரிகெரே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தரிகெரேவை சேர்ந்த கபாப் மூர்த்தி, உள்பட 13 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையான மறுநாள் கபாப் மூர்த்தி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை மனோஜ், அஜித், ராகேஷ், சிவு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இன்னும் 5 பேர் தலைமறைவாகவுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story