வெவ்வேறு விபத்துகளில் பெங்களூரு வாலிபர் உள்பட 4 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் பெங்களூரு வாலிபர் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 28 Nov 2022 2:04 AM IST (Updated: 28 Nov 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் வெவ்வேறு விபத்துகளில் பெங்களூரு வாலிபர் உள்பட 4 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு வாலிபர் சாவு

பெங்களூரு விஜயநகரை சோந்தவர் நரசிம்கா (வயது 29). இவர், தனது நண்பர்களுடன் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா கெப்பூரு அருகே சிக்கண்ணா கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். அவர்கள் அஞ்சேபாளையா பகுதியில் வரும் போது சாலையில் இருந்த வேகத்தடையில் கார் ஏறி இறங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து கவிழ்ந்தது. இதனால் நரசிம்கா, அவரது நண்பர்கள் காருக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினாாகள்.

உடனடியாக 4 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நரசிம்கா இறந்துவிட்டார்.

பெண் பலி

இதுபோல், சிரா தாலுகா கள்ளம்பெல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலையை கடந்து செல்ல முயன்ற பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவை சேர்ந்த மாயம்மா என்பவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான மாயம்மா, பெங்களூரு மாநகராட்சியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சொந்த ஊருக்கு செல்வதற்காக துமகூரு சென்று, அங்கிருந்து பஸ்சில் பல்லாரிக்கு செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் அவர் பலியாகி இருந்தார்.

இதுபோன்று சிரா டவுன் மாகோடு கேட் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில், அதில் பயணம் செய்த ராகேஷ் மற்றும் நாகராஜ் தலையில் பலத்தகாயம் அடைந்து இறந்து விட்டார்கள். இந்த விபத்துகள் குறித்து குனிகல், சிரா போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story