ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து


ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
x

கோப்புப்படம்

ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

புவனேஷ்வர்,

பாலசோர் மாவட்டத்தில் நடந்த மூன்று ரெயில் சோகம் மக்கள் மனதில் இன்னும் மறையாமல் இருக்கும் நேரத்தில், நேற்று ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலா பகுதியில் மற்றொரு சரக்கு ரெயில் தடம் புரண்டது.

ஒடிசா மாநிலம், ராயகடா மாவட்டதில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள், தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாலாசோர் மாவட்டத்தின் பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று ரெயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story