திப்பேருத்ரசாமி கோவிலில் ரூ.45 லட்சம் உண்டியல் வருவாய்


திப்பேருத்ரசாமி கோவிலில் ரூ.45 லட்சம் உண்டியல் வருவாய்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:30 AM IST (Updated: 16 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாயக்கனஹட்டியில் உள்ள திப்பேருத்ரசாமி கோவிலில் ரூ.45 லட்சம் உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது.

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் நாயக்கனஹட்டி கிராமத்தில் திப்பேருத்ரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் அந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் உள்ள உண்டியல்களின் காணிக்கை கடந்த ஓராண்டாக எண்ணப்படாமல் இருந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் தாசில்தார் மால்தேஸ் கலந்துகொண்டு கண்காணித்தார்.

மேலும் கோவில் நிர்வாக அதிகாரிகளும், முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்து ெகாண்டனர். இதில் கோவிலில் இருந்த உண்டியல்களில் மொத்த காணிக்கையாக ரூ.45 லட்சம் இருந்ததாக தாசில்தார் மால்தேஸ் தெரிவித்தார். அந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story