3 ஆண்டுகளில் 'உபா' சட்டத்தில் 4,690 பேர் கைது 149 பேர் மீது குற்றம் நிரூபணமானதாக மத்திய அரசு தகவல்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) என்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் 4 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) என்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் 4 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்தில் மட்டும் 1,338 பேர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட 4 ஆயிரத்து 690 பேரில், 149 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவை கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- நாடு முழுவதும் 69 லட்சத்து 76 ஆயிரத்து 240 மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். கடந்த 2021-2022 நிதி ஆண்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-
காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை 3-ந் தேதி வரை 1 கோடியே 6 லட்சத்து 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் வாகனம் ஓட்டியதற்கான சரியான தொகை மட்டுமே (உரிமையாளரின்) கணக்கில் இருந்து கழிக்கப்படும். இந்த முறையை ஆய்வு செய்து வருகிறோம்.
இதில் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்று இதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. நம்பர் பிளேட் தொழில்நுட்பம் நன்றாக உள்ளது. எனினும் ஒரு மாதத்துக்குள் தேர்வு செய்வோம். உலகின் மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம். 6 மாதத்துக்குள் முடிந்தவரை சீக்கிரம் செய்ய முயற்சிப்பேன். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
இதைப்போல மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்காரி, அடுத்த 3 ஆண்டுகளில் 26 பசுமை விரைவுச்சாலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2024-ம் ஆண்டுக்குள் இந்திய சாலை உள்கட்டமைப்பு, அமெரிக்காவை போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று கூறிய கட்காரி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் (என்.எச்.ஏ.ஐ) நிதிப்பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.