உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம்
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பல்ராம்பூர்,
உத்தரபிரதேச மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்பூர் கிராமத்தின் மலைத்தொடரின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கே வந்த சிறுத்தை அவர்களைத் தாக்கியது. இதனால் சிறுவர்கள் அலறினர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்தனர். அந்த சிறுத்தை கிராம மக்களையும் தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையே, ஜனக்பூர் மலைத்தொடர் அருகே ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுத்தை இறந்ததற்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story