சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரண்
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினரிடம் 5 நக்சல்கள் சரணடைந்தனர்.
ராஞ்சி,
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 5 நக்சல்கள் இன்று சி.ஆர்.பி.எப். மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இதில் 2 பேரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதுகாப்பு படையினரிடம் அவர்கள் சரணடைந்துள்ளனர்.
பழங்குடி மக்கள் மீது மாவோயிஸ்டுகள் நிகழ்த்தும் வன்முறைகள் மற்றும் மாவோயிஸ்டு கொள்கைகள் மீது தங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சரணடைய முடிவு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், மாநில அரசின் நக்சல் ஒழிப்பு கொள்கை மற்றும் மறுவாழ்வு திட்டங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story