ஒலல்கெரே அருகே எறும்பு தின்னியை வேட்டையாடிய 5 பேர் கைது


ஒலல்கெரே அருகே எறும்பு தின்னியை வேட்டையாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒலல்கெரே அருகே எறும்பு தின்னியை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா கோலூர் வனப்பகுதியில் சிலர் எறும்பு தின்னியை வேட்டையாடி செல்வதாக ஒலல்கெரே வனத்துறை அதிகாரி வசந்த் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்போில் வனத்துறை அதிகாரி வசந்த் தலைமையிலான அதிகாரிகள் அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு எறும்பு தின்னிகளை கொன்று அதன் தோல் மற்றும் நகங்களை திருடி செல்ல முயன்ற 5 பேரை வனத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ், ஒசதுர்காவை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் மாதிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி, மாடலப்பா, பூத்தனப்பா ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 3 கிலோ 200 கிராம் எறும்பு தின்னியின் தோல் மற்றும் நகங்களை பறிமுதல் செய்தனர். இதனை அவர்கள் கேரளாவிற்கு கடத்தி சென்று அங்கிருந்து வெளிநாட்டிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.


Next Story