வீட்டில் மனைவி இல்லாதபோது... கணவர் செய்யும் 5 விசயங்கள்


வீட்டில் மனைவி இல்லாதபோது... கணவர் செய்யும் 5 விசயங்கள்
x
தினத்தந்தி 11 Sep 2022 7:13 AM GMT (Updated: 11 Sep 2022 9:37 AM GMT)

வீட்டில் மனைவி இல்லாத தருணத்தில் கணவரின் நடவடிக்கைகளில் ஏற்படும் 5 மாற்றங்கள் பற்றி காண்போம்.



நியூயார்க்,



கணவன், மனைவி இடையேயான பந்தம் புனிதம் வாய்ந்தது. பல கணவர்கள் பொதுவாக, தங்களது மனைவியின் முன் எப்போதும் நல்ல மனிதராக தோற்றமளிக்க விரும்புவதுண்டு. இதற்காக சில சமயங்களில் நடிக்கவும் செய்வார்கள். அல்லது அதுபோன்று காட்டி கொள்ளவும் செய்வார்கள்.

திருமண பந்தத்தில், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என கூறுவதுண்டு. இது கணவருக்கும் கூட பொருந்தும். திருமணத்திற்கு முன் மைனராக இருக்கும்போது, பல சுட்டி தனங்களில் ஈடுபடும் வாலிபர்கள் திருமணத்திற்கு பின்பு, கட்டி போட்டவர்களாக ஆகி விடுவார்கள்.

அவர்களால் தங்களது மனம் போன போக்கில் வாழ முடியாது. ஆனால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக மனைவி வீட்டில் சில நாட்கள் இல்லாத சூழல் ஏற்படும்போது, கணவரின் உண்மையான முகம் வெளிப்படும்.




பல கணவர்கள் தங்களது மனைவி ஊருக்கு போய் விட்டாலோ அல்லது சில நாட்கள் தாய், தந்தை வீட்டுக்கோ அல்லது உறவுக்காரர்கள் வீட்டுக்கோ சென்று விட்டாலோ அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். இதுபோன்று மனைவி வீட்டில் இல்லாத தருணங்களில் கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு ஒன்று இப்படி தெரிவிக்கின்றது.

குளியலறையில் பொழுது போக்குதல்:

1) கணவர்களில் பலர் மனைவி இல்லாத தனிமையை போக்க மொபைல் போன்களில் நேரம் செலவிடுகின்றனர். சிலர் குளியலறைக்கு சென்று விடுகின்றனர். சில சமயங்களில் போன் தவிர, லேப்டாப் மற்றும் டேப்லெட் இவற்றையும் கூட எடுத்து கொண்டு குளியலறைகளில் மணிக்கணக்கில் நேரம் செலவிடுவதுண்டு. நேரம் போவதே தெரியாமல் இருக்க பலர் அமர்ந்து பேப்பர் கூட படிப்பதுண்டு.

பழைய நட்பு துளிர் விடுதல்:

2) திருமணத்திற்கு பின் பல பொறுப்புகள் கூடி விடும். அதனால், கடிவாளம் போட்ட குதிரையாக ஆகி விடுவார்கள். ஆனால், மனைவி இல்லாத சமயத்தில் பழைய நட்பு துளிர்க்கும். திருமணத்திற்கு பின்னர் தங்களது பழைய நண்பர்களுடன் பேச முடியாமல் இருந்தவர்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்வார்கள். ஒரு சிலர் தங்களது முன்னாள் காதலியுடன் யாருக்கும் தெரியாமல் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும், மனம் விட்டு பேசுவதும் கூட உண்டு.




டி.வி. நிகழ்ச்சிகள்:

3) பொதுவாகவே பெண்கள் என்றால் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால், தங்களது விருப்ப நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் கணவர்கள் திணறுவதுண்டு. அதனை ஓர கண்ணால் பார்ப்பதும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் போலும். ஆனால், மனைவி வீட்டில் இல்லாத தருணங்களில், பழைய விளையாட்டு போட்டிகளை பார்ப்பது, திரைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்ப்பது என கணவர்கள் நேரம் செலவிடுவதுண்டு. ஒரு வித ஆத்திரத்துடனேயே டி.வி. நிகழ்ச்சிகளில் நேரம் கரைந்து போவதும் உண்டு.

நண்பர்களுடன் பார்ட்டி:

4) இதில் முக்கிய விசயம் என்னவெனில், வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் தங்களது நண்பர்களை அழைத்து சிலர் பார்ட்டி கொடுப்பதும் உண்டு. சில சமயத்தில், கணவர்கள் வீட்டிலேயே தங்களுக்கே பார்ட்டி கொடுத்து கொள்வதும் கூட நடக்கும். ஆனால், இது பல நாட்களுக்கு மனைவி வெளியூர் சென்ற தருணங்களிலேயே இருக்கும்.

சமையலறை பணியில்:

5) பெருமளவில் வீடுகளில் சமையலறையில் பெண்களின் ஆட்சியே இருக்கும். ஆனால், ஆடவர்களில் பலர் அவர்களே சமையல் செய்யவும் விரும்புவதுண்டு. அதுபோன்ற நபர்கள் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தங்களுக்கான உணவை அவர்களே தயார் செய்து கொள்வதும் நடக்கும். சரி உங்கள் வீட்டில் எப்படி...?


Next Story