நரேகா திட்டத்தில் ரூ.51½ லட்சம் முறைகேடு கிராம பஞ்சாயத்துகளிடம் வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு


நரேகா திட்டத்தில் ரூ.51½ லட்சம் முறைகேடு  கிராம பஞ்சாயத்துகளிடம் வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நரேகா திட்டத்தில் ரூ.51½ லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த தொகையை கிராம பஞ்சாயத்துகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நரேகா திட்ட மத்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கோலார் தங்கவயல்:

நரேகா திட்டம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான நரேகா திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் சரியான முறையில் செயல்பட்டதா, இல்லையா என்பது குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நரேகா திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என்பது அதிகாரிகள் கவனத்திற்கு தெரியவந்தது.

இதனால் நரேகா திட்டத்தின் மத்திய அதிகாரிகள் கணக்கு தணிக்கை குழுவுக்கு சிபாரிசு செய்ததுடன், அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அதன்படி அதிகாரிகள் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தனர். பின்னர், நரேகா திட்ட கணக்கு தணிக்கை குழு அதிகாரிகளிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள்

அதில் மாவட்டம் முழுவதும் நரேகா திட்டத்தின் மூலம் கிராம புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது. நரேகா திட்டத்தின் மூலம் ரூ.51.44 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த அறிக்கையின் பேரில், நேற்று நரேகா திட்டத்தின் மத்திய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதில், 'நரேகா திட்டத்தில் மாவட்டம் முழுவதும் ரூ.51.44 லட்சம் முறைகேடு நிகழ்ந்துள்ளது. அந்த தொகையை சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


Next Story