கஞ்சா விற்ற 511 பேர் கைது
மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 511 பேரை கைது செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு, ஜன.12-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கடந்த 2022-ம் ஆண்டில் நகரில் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக இதுவரை 511 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 398 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 511 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 192 கிலோ கஞ்சா, 596 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரை உள்பட பல்வேறு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.59 லட்சத்து 59 ஆயிரம் 280 என்று தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story