கர்நாடகத்தில் 53 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
கர்நாடகத்தில் 53 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி, சம்பள உயர்வு வழங்கி மாநில அரசு இனிப்பான செய்தியை கொடுத்து உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதாப் ரெட்டி, சதீஷ் குமார்
1. பெங்களூருவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அலோக் மோகன், ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2. கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டிக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பணியில் தொடர்வார்.
3. கர்நாடக ஐ.பி.எஸ். பிரிவை சேர்ந்த பங்கஜ்குமார் தாக்கூர் டெல்லியில் உளவுத்துறை இணை இயக்குனராக பணியாற்றுவார். அவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
4. வடகிழக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த மனீஷ் கர்பீகர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இனி பணியாற்றுவார்.
5. பெங்களூருவில் உளவுத்துறையில் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சவுமேந்த் முகர்ஜி, கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் காலியாக உள்ள தகவல், தளவாடங்கள் மற்றும் நவீனமயமாக்கல் துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக இனி பணி செய்வார்.
6. மத்திய மண்டல ஐ.ஜி. சந்திரசேகர், பெங்களூரு கிழக்கு மண்டல துணை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
7. வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சதீஷ்குமார், வடகிழக்கு மண்டல ஐ.ஜி.யாக இனி பணி செய்வார்.
8. கொச்சியில் அமலாக்கத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வரும் கர்நாடக ஐ.பி.எஸ். பிரிவை சேர்ந்த அபிஷேக் கோயலுக்கு, ஐ.ஜி.யாக பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது.
ரமன்குப்தா
9. பெங்களூருவில் உளவுத்துறையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ரமன்குப்தாவுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இனி பணியாற்ற உள்ளார்.
10. கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் ஆலோசகராக பணியாற்றி வரும் கர்நாடக பிரிவு
ஐ.பி.எஸ். அதிகாரி கவுஜியேந்திர குமாருக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது.
11. குற்ற விசாரணை பிரிவின் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரவிகாந்தேகவுடாவுக்கு, ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் மத்திய மண்டல ஐ.ஜி.யாக இனி பணியாற்றுவார்.
12. பெங்களூருவில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சித்தராமப்பாவுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது செய்து வரும் பணியில் நீடிப்பார்.
13. பல்லாரி மண்டல டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் லோகேஷ்குமாருக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் பல்லாரி மண்டல ஐ.ஜி.யாக இனி பணியாற்றுவார்.
14. தீயணைப்பு துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் பாலகிருஷ்ணாவுக்கு, ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தீயணைப்பு துறை ஐ.ஜி.யாக இனி பணி செய்வார்.
15. பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக பணியாற்றி வரும் சரணப்பாவுக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது செய்து வரும் பணியில் நீடிப்பார்.
16. பெங்களூருவில் போக்குவரத்து இணை கமிஷனராக பணியாற்றி வரும் அனுசேத்துக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இவர் தற்போது செய்து வரும் பணியில் தொடர்வார்.
ஐடா மார்டின்- ரவி டி.சன்னன்னவர்
17. ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் போரஜ் பூஷன் குலபரவுக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது.
18. டெல்லியில் உள்ள மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்யும் சாந்தனு சின்ஹாவுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது.
19. டெல்லி சி.பி.ஐ.யில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் கர்நாடக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி அபினவ் கரேவுக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது.
20. ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் வம்சி கிருஷ்ணாவுக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் சம்பளமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
21. கியோனிக்ஸ் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ரவி டி.சன்னன்னவருக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது செய்து வரும் பணியில் நீடிப்பார்.
22. மைசூருவில் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் ரமேசுக்கு, டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அவர் மைசூரு போலீஸ் கமிஷனராக தொடர்ந்து பணி செய்வார்.
23. கலபுரகியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியின் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்வராக பணியாற்றி வரும் ஐடா மார்ட்டினுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அவர் ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இனி பணியாற்றுவார்.
24. காத்திருப்போர் பட்டியலில் உள்ள திவ்யா கோபிநாத், உளவுத்துறை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார்.
25. கலபுரகி போலீஸ் பயிற்சி பள்ளியின் போலீஸ் சூப்பிரண்டாகவும், துணை முதல்வராகவும் பணியாற்றி வந்த அருண், அந்த பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
26. சிவமொக்காவில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அமதே விக்ரம், காலியாக உள்ள உளவுத்துறை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
27. பெலகாவியில் கூடுதல் சூப்பிரண்டாக பணி செய்த மகானிங் நந்தகவி காலியாக உள்ள உளவுத்துறை பதவிக்கு போலீஸ் சூப்பிரண்டாக இனி பணி செய்வார்.
மேற்கண்டவர்கள் உள்பட 53 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள சதீஷ்குமார், தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.