கர்நாடகத்தில் புதிதாக 551 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 551 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 551 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 665 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 283 பேருக்கும், தார்வாரில் 13 பேருக்கும், குடகில் 32 பேருக்கும், மைசூருவில் 25 பேருக்கும், ராமநகரில் 61 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். ஒரே நாளில் 486 பேர் குணம் அடைந்தனர். 3 ஆயிரத்து 688 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story