இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,554 ஆக பதிவு; மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,554 ஆக பதிவாகி உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக 10 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,554 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து 6,322 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 294 ஆக உள்ளது. இதுவரை சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 850 ஆக உள்ளது. இது 1.47% ஆகும்.
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 139 ஆக உள்ளது. இது 1.19% ஆகும். ஒரே நாளில் 21 லட்சத்து 63 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால், மொத்த தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 214 கோடியே 77 லட்சத்து 55 ஆயிரத்து 21 ஆகவுள்ளது.