ஆந்திராவில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 6 பேர் ரெயில் கண்காணிப்பு கேமராவால் பிடிபட்டனர்

ஆந்திராவில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 6 பேர் ரெயில் கண்காணிப்பு கேமராவால் பிடிபட்டனர்
x

ஆந்திராவில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கிய சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர், ரெயில் கண்காணிப்பு கேமரா மூலமே பிடிபட்டுள்ளனர்.

விஜயவாடா,

ஆந்திராவில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கிய சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர், ரெயில் கண்காணிப்பு கேமரா மூலமே பிடிபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தே பாரத் ரெயில் சென்றது.

பீதாபுரம்-சமர்லகோதா இடையே அந்த ரெயில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அதன் மீது கல்வீசி தாக்கினர். அதில் ரெயிலின் சில கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

உடனடியாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கல் வீசியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அந்த வந்தே பாரத் ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.

அதில், ரெயில் மீது கல் வீசியவர்கள் வாலிபர்கள், சிறுவர்கள் என தெரியவந்தது.

அவர்களில் ஒருவரை அடையாளம் கண்ட ரெயில்வே போலீசார் அவரை மடக்கினர். அவர் மூலமாக, கல்வீசி தாக்கிய அனைவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

கல் வீசியவர்களில் 3 பேர் வாலிபர்கள், மற்ற மூவர் சிறுவர்கள்.

விஜயவாடா ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர்கள் மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுவர்கள் மூவரும் சிறார் சீர்த்திருத்த இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Next Story