ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியின்போது இனிப்பு சாப்பிட்ட பலருக்கு திடீர் உடல்நலக்குறைவு


ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியின்போது இனிப்பு சாப்பிட்ட பலருக்கு திடீர் உடல்நலக்குறைவு
x

ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட இனிப்பு சாப்பிட்ட குழந்தை உள்பட 6 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்ஹர் மாவட்டம் மீர்பூர் கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (வயது 24) ரக்‌ஷாபந்தன் நிகழ்ச்சியை கொண்டாடுவதற்காக ராமாபூர் மார்க்கெட்டில் இனிப்பு பலகாரங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

தான் வாங்கிய இனிப்புகளை தனது மகள் நந்தி (வயது 2), சகோதரன் அங்கித் (வயது 14), சகோதரிகள் குஷி (வயது 16), பிரியா (வயது 12) உறவினர் பவன் குமார் (வயது 26) ஆகியோருக்கு கொண்டுத்துவிட்டு அவரும் சாப்பிட்டுள்ளார்.

இனிப்பு சாப்பிட்ட சில நிமிடங்களில் 6 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 6 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலாவதியான இனிப்பை சாப்பிட்டதாலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story