பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..! ஆந்திராவில் சோகம்
ஆந்திராவில் பேருந்து மீது லரி மோதிய விபத்தில் 6 பயணிகள் பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து திருப்பதிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னமையா மாவட்டம், புள்ளம்பேட்டை அருகே லாரி வந்துகொண்டிருந்தபோது, சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி பயங்கர வேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தால் பேருந்தின் ஒரு பகுதி முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த புள்ளம்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
லாரியை அதன் டிரைவர் வேகமாக ஓட்டி சென்றதே விபத்திற்கான காரணம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து காரணமாக திருப்பதி, கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.