சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சரண்


சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சரண்
x

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.

சுக்மா,

சத்தீஸ்காரின் பல மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதேநேரம் வன்முறை பாதையை விட்டு விலகி திருந்தி வாழ விரும்பும் நக்சலைட்டுகளுக்கு பல்வேறு நிவாரண உதவிகளையும் மாநில அரசு வழங்குகிறது. இந்த நிவாரண கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பல நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர்.

அந்தவகையில் சுக்மா மாவட்டத்தின் பேஜி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வந்த 7 நக்சலைட்டுகள் நேற்று தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசார் முன் சரணடைந்தனர்.

அவர்களுக்கு நிவாரண நிதி மற்றும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுனில் சர்மா தெரிவித்தார்.


Next Story