ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி 7 இளைஞர்கள் பலி


ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி 7 இளைஞர்கள் பலி
x

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது 7 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் ஸ்ரீநகர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 8 பேர் இன்று அக்கிராமத்தில் உள்ள பங்கா ஆற்றில் குளிக்க சென்றனர்.

இந்நிலையில், இளைஞர்கள் 8 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அப்போது, சக இளைஞர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனார், அந்த இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். ஒரே ஒரு இளைஞர் மட்டும் உயிர் தப்பி கிராமத்திற்கு சென்று உதவிகேட்டுள்ளார். விரைந்து வந்த கிராம மக்கள் தண்ணீரில் மூழ்கிய 7 இளைஞர்களையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து உயிரிழந்த 7 இளைஞர்களின் உடல்களையும் கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story