இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 7 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுடெல்லி,
நாட்டில் சமீப காலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி,7,240பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 267 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,769 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.இந்தியாவில் நேற்று மட்டும் 15,31,510 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.