இந்தியா - வங்கதேசம் இடையே கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம்; இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்பு


இந்தியா - வங்கதேசம் இடையே கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம்; இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்பு
x

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கூட்டு ஆலோசனைக் குழுவின் 7வது சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கூட்டு ஆலோசனைக் குழுவின் 7வது சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.

வங்கதேச வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமன் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இந்தியா வந்தார். இன்று மாலை இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ஜேசிசி கூட்டு ஆலோசனை ஆணையத்தின் 7வது சுற்றில் அவர் கலந்து கொள்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் மோமன் ஆகியோர் தலைமை தாங்குவார்கள். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு நடைபெறும் கூட்டு ஆலோசனைக் குழுவின் நேரடி சந்திப்பு இதுவாகும். இதன் முந்தைய பதிப்பு காணொலி வாயிலாக 2020 இல் நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று, எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, இணைப்பு, எரிசக்தி, நீர் வளங்கள், வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் பிராந்திய மற்றும் பல தரப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் இந்த ஆலோசனை கூட்டம் மதிப்பாய்வு செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story