காஷ்மீரில் பள்ளத்துக்குள் கார் பாய்ந்ததில் 8 பேர் பலி
காஷ்மீரில் பள்ளத்துக்குள் கார் பாய்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
ஜம்மு,
காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சிங்காம் என்ற இடத்தில் இருந்து சாட்ரூ என்ற கிராமத்துக்கு ஒரு காரில் சிலர் நேற்று சென்றனர்.
போண்டா என்ற கிராமத்துக்கு அருகில் மலைச்சாலையில் அந்த கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ராணுவத்தினருடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். 3 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story