உத்தரப்பிரதேசம்: ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதியதில் 8 பேர் பலி, 7 பேர் படுகாயம்
உத்தரப்பிரதேசத்தில் ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை ஆட்டோ ரிக்ஷா மீது லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா கோட்வாலி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன காயமடைந்தவர்களுக்கு உதவ வேண்டும்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.