வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் அபேஸ்


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் அனில் குமார். பட்டதாரியான இவர் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மர்ம நபர் ஒருவர் மூலம் குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலை எடுத்து பார்த்தார் அதில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த குறுந்தகவலின் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் பேசிய மர்ம நபர்கள் அதிகளவு சம்பளம் கிடைக்கும் வேலை உள்ளது. அந்த வேலைக்கு சேரவேண்டும் என்றால் அதிகளவு பணம் செலுத்தவேண்டும். உடனே வேலை கிடைத்துவிடும் என்று கூறினர். மேலும் அனில் குமாரின் வங்கி கணக்கு விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களை அந்த நபர் பெற்று கொண்டார். இதையடுத்து அனில் குமாரின் செல்போனுக்கு அந்த நபர் ஒரு லிங்க் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த லிங்கை அனில் குமார் திறந்து பார்த்தார். அதற்குள் அவரது செல்போனில் இருந்து மர்ம நபர் ரூ.8 லட்சம் திருடிவிட்டார். இது குறித்து குறுந்தகவல் அனில் குமார் செல்போனுக்கு வந்தது. அதை பார்த்த அவர் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து உடனே உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story