மோதிரம் விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை சாவு


மோதிரம் விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 24 March 2023 10:00 AM IST (Updated: 24 March 2023 10:04 AM IST)
t-max-icont-min-icon

குடகு அருகே மோதிரத்தை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை இறந்தது.

குடகு-

குடகு அருகே மோதிரத்தை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை இறந்தது.

மோதிரத்தை விழுங்கியது

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாபுரா கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கரிடோகோடு கிராமத்தை சேர்ந்தவர் முனீர். இவருக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது கீழே கிடந்த மோதிரம் ஒன்றை எடுத்து விழுங்கியது. இந்த மோதிரம் குழந்தையின் தொண்டை பகுதியில் சிக்கி கொண்டது.

இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை பார்த்த பெற்றோர், உடனே குழந்தையை சித்தாபுராவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மடிகேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையில் தொண்டையில் சிக்கியிருந்த மோதிரத்தை எடுத்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை இறந்தது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கதறி கூச்சலிட்டு அழுதனர். இது குறித்து விராஜ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மோதிரத்தை விழுங்கிய 8 மாத குழந்தை இறந்த சம்பவம் விராஜ்பேட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story